/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவில் 'சாம்போ' போட்டி; புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
/
தேசிய அளவில் 'சாம்போ' போட்டி; புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
தேசிய அளவில் 'சாம்போ' போட்டி; புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
தேசிய அளவில் 'சாம்போ' போட்டி; புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 20, 2024 06:03 AM

புதுச்சேரி : தேசிய அளவிலான சாம்போ போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களை வைத்திலிங்கம் எம்.பி., வாழ்த்தி வழியனுப்பினார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேசிய அளவிலான சாம்போ போட்டி நடக்க உள்ளது. இதில் புதுச்சேரியில் இருந்து 15 மாணவ மாணவியர் கராத்தே மதிஒளி தலைமையில் பங்கேற்ற உள்ளனர். இவர்களை வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
வைத்திலிங்கம் எம்.பி., விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி அனுப்பினர். கராத்தே சங்க செயலாளர் இளங்கோவன், கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன், நடுவர்கள் கோபாலகிருஷ்ணன், லலிதா, விக்னேஷ்வரன், சங்க உறுப்பினர்கள் சங்கர், ஜனார்த்தனன், கோதண்டராமன், சரவணன், உதயன் உட்பட பலர் உடனிருந்தனர்.
ஏற்பாடுகளை சாம்போ சங்க செயலாளர் மதிஒளி செய்திருந்தார்.