தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
ADDED : ஏப் 16, 2026 11:07 PM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், தேசிய அளவிலான தொழில்நுட்ப (ஜிக்யாசா 26) கருத்தரங்கம் துவக்க விழா நேற்று நடந்தது.
கல்விசார் மேம்பாட்டை ஊக்குவித்தல், தொழில்நுட்ப பரிமாற்றத்தை வளர்த்தல் மற்றும் மாணவர்களிடையே புதுமை சிந்தனையை ஊக்குவித்தலை மையப்படுத்தி, கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கி, தொழில்நுட்ப மூலம், புதுமை, ஆர்வம் மற்றும் தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் திருமலைவாசன் பங்கேற்று பேசுகையில், 'இன்றைய தொழில்நுட்பட மைய உலகில் தொலை உணர்வு மற்றும் புவியியல் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதை பற்றியும், எதிர்கால கண்டுப்பிடிப்புகளுக்கு பல துறைகளில் கணினி திறன் முக்கிய சக்தியாக இருக்கிறது.
பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் செயற்கைகோள் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றியும், பாடப்புத்தக அறிவை தாண்டி, அறிவை புதுப்பித்து உருவெடுத்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் கண்டுப்பிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என, பேசினார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் சுதா, சாருலதா, அஜய் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
