தேசிய நொண்டி விளையாட்டு போட்டி: புதுச்சேரி மாணவர்களுக்கு தங்கம்
தேசிய நொண்டி விளையாட்டு போட்டி: புதுச்சேரி மாணவர்களுக்கு தங்கம்
ADDED : மார் 12, 2026 03:46 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான நொண்டி விளையாட்டுப் போட்டியில் புதுச்சேரி மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவிலான நொண்டி விளையாட்டு போட்டி நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் சார்பில், புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் புதுச்சேரி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றனர். அவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர் வீரன், சேர்மன் ஏகாம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.
அடுத்த மாதம் ஏப்ரல் 27, 28ம் தேதிகளில் நேபாளில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டியில் இந்திய அணிக்காக புதுச்சேரி மாணவர்கள் 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
