ADDED : டிச 20, 2024 04:15 AM

புதுச்சேரி: ஜிப்மர் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், தேசிய ஓய்வூதியர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஸ்வநாதன் நோக்கவுரையாற்றினார்.
விழாவில் 75 வயதிற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பத்மஸ்ரீ டாக்டர் நளினி வாழ்த்தி பேசினார்.தொடர்ந்து நடந்த சிறப்பு கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு 80 வயதில் வழங்கப்படும் கூடுதல் பென்ஷன் 65 வயது முதல் வழங்க வேண்டும்.
மெடிக்கல் அலவன்ஸ் ரூபாய் ஆயிரத்தில் இருந்து 3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 மாத டி.ஏ.,வை வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகைகள் வழங்க வேண்டும்.
ஜூன் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு கூடுதல் இன்கிரிமென்ட் வழங்க வேண்டும்.
எட்டாவது ஊதிய கமிஷன் கமிட்டியை உடனே அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியத் துறை அமைச்சர், செயலருக்குகடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.