/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பல்கலை.,யில் தேசிய அறிவியல் மாநாடு
/
தொழில்நுட்ப பல்கலை.,யில் தேசிய அறிவியல் மாநாடு
ADDED : ஏப் 11, 2025 04:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒன்பது துறைகள் சார்பில், தேசிய தொழில்நுட்ப அறிவியல் மாநாடு, ஜிக்யாசா- 2025 என்ற பெயரில் நடந்தது.
பேராசிரியர் புளோரன்ஸ் சுதா வரவேற்றார். மெட்டல் ஸ்கோப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் ஜோசப் ரோசாரியோ, எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை அதிகாரி அன்பு தம்பி மற்றும் பல்கலைக் கழக துணை வேந்தர் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மாநாட்டில் ஒன்பது துறைகளும் தங்களது தொழில்நுட்ப சாதனைகள், ஆராய்ச்சி முனைப்புகள் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு துறை வாரியாக தனித் தனியாக இதழ்களை வெளியிட்டன.
தொழில்நுட்பத்தின் மூலமாக நாட்டு முன்னேற்றத்தில் இளம் தலைமுறையின் பங்கு குறித்து விளக்கப்பட்டது. துறை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

