/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அறிவியல் தின விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
தேசிய அறிவியல் தின விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தேசிய அறிவியல் தின விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தேசிய அறிவியல் தின விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : பிப் 29, 2024 05:53 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில், நேற்று தேசிய அறிவியல் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மைய இயக்குனர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி பல்கலை நானோ தொழில் நுட்ப மைய துறை பேராசிரியர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், சி.வி.ராமனின் வாழ்க்கை வரலாறு மற்றும் ராமன் விளைவு பற்றி மாணவர்களிடம் பேசினார்.
இதில் அறிவியல் படைப்பு போட்டியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில், மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லுாரி , இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லுாரி, சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு கல்லுாரிகள், சிறந்த படைப்பிற்கான பரிசுகளை வென்றன.
இதற்கான ஏற்பாடுகளை, இயற்பியல் துறை பேராசிரியர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.