sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் நாள் விழா

/

 ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் நாள் விழா

 ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் நாள் விழா

 ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் நாள் விழா


ADDED : மார் 02, 2026 04:02 AM

Google News

ADDED : மார் 02, 2026 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் தேசிய அறிவியல் நாள் விழா “நிலைத்த முன்னேற்றத்திற்கான அறிவியல் - பசுமை தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு நிறைவு விழா நடந்தது.

தலைமை வழிகாட்டி (சீப் மென்டர்)அரவிந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் குருலிங்கம், உள் தர உறுதிப்பிரிவு (ஐகியூ ஏசி) அகாடமிக் தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒரு வாரம் நடைபெற்ற விழாவில் போஸ்டர் வழங்கல், வினாடி - வினா, புதுமை யோசனை வழங்கல், கழிவில் இருந்து கலை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் திட்டக் கண்காட்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் டெரன்ஸ் ப்ரெடெரிக் பெர்னாண்டஸ் கலந்து கொண்டு மாணவர்களின் திட்டங்களை பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளைஒழுங்குபடுத்துனர் சியாமளா கவுரி, இணை ஒழுங்குபடுத்துனர் ஸ்ரீதேவி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us