தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலாஜி வித்யா பீத் பல்கலையில் தேசிய அறிவியல் தின விழா 

 பாலாஜி வித்யா பீத் பல்கலையில் தேசிய அறிவியல் தின விழா 

 பாலாஜி வித்யா பீத் பல்கலையில் தேசிய அறிவியல் தின விழா 


ADDED : மார் 04, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், தேசிய அறிவியல் தின விழாவையொட்டி, 'பண்டைய ஞானம், நவீன அறிவியல், எதிர்கால இந்தியா' என்ற தலைப்பில், 'அறிவியலில் பெண்கள்: வளர்ந்த இந்தியா நோக்கி' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், கிருமாம்பாக்கம் செயின்ட் ஜோசப் ஆங்கில மேல்நிலை பள்ளி 9ம் வகுப்பு மாணவர் அமர்நாத் முதல் பரிசும், புதுச்சேரி சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி பவித்ரா இரண்டாம் பரிசும், முள்ளோடை மகரிஷி வித்யா மந்திர் 9ம் வகுப்பு மாணவிகார்த்திகா மூன்றாம் பரிசும் வென்றனர்.

அதிக பங்கேற்பு மற்றும் மொத்த மதிப்பெண் அடிப்படையில், மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கும், ஸ்கூல் ஆப் பிசியோதெரபி கல்லுாரிக்கும்,பல்கலைக்கழக 'வேந்தர் கோப்பை' வழங்கப்பட்டது. மேலும், தேசிய அறிவியல் வாரத்தில் இளங்களை மற்றும் முதுகலை பிரிவு மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவ்விழா, அறிவியல் சிந்தனை, புதுமை, பெண்களின் பங்கு மற்றும் இளைஞர்களின் எதிர்காலக் கட்டமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி சிறப்பாக நிறைவுற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us