/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல் மருத்துவ கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
/
பல் மருத்துவ கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
ADDED : அக் 02, 2024 02:54 AM

புதுச்சேரி : இந்திய எண்டோ டான்டிக் சொசைட்டியின் 32வது, தேசிய மாநாடு நடப்பதையொட்டி, மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.
இந்திய எண்டோ டான்டிக் சொசைட்டியின் 32 வது, தேசிய மாநாடு சென்னை வர்த்தக மையத்தில், வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, ப்ரீ கான்பரன்ஸ் கோர்ஸ் புதுச்சேரி மகாத்மா காந்தி, முதுநிலை மருத்துவ கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, பல் மருத்துவ கல்லுாரியில் கருத் தரங்கு நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கென்னடிபாபு தலைமை தாங்கினார். வேர் நோய் சிகிச்சை பிரிவு தலைவர் பிரகாஷ்ஜோதி போர்த்தாகூர் வரவேற்றார். பேராசிரியர் சுவாதிகா பங்கேற்று, விருந்தினர்களை கவுரவித்தார்.
சிறப்பு விருந்தினராக மோகன் புவவேஸ்வரன், வேர் சிகிச்சை செய்த பற்களின் வலிமையை அதிகரிக்கும் வழிமுறைகளை பற்றி விளக்கம் அளித்தார். தொடர்ந்து, லைவ் டெமோ முறையில், மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்திய எண்டோ டான்டிக் சொசைட்டி சார்பில், வேணி, பல்வேறு பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட முதுநிலை பேராசிரியர்கள், மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

