தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.ஐ.டி., கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் மிடிலென்ஸ்

 எம்.ஐ.டி., கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் மிடிலென்ஸ்

 எம்.ஐ.டி., கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் மிடிலென்ஸ்


ADDED : மார் 17, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அனைத்து பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் 'மிடிலென்ஸ்' நடந்தது.

கருத்தரங்கை, கல்லுாரி முதல்வர் மலர்க்கண் துவக்கி வைத்தார். சென்னை, எச்.சி.எல்., டெக் நிறுவன துணைத் தலைவர் சவுமியா சுரேஷ், கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள ஏ.ஐ.,யை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதோடு, ஏ.ஐ., மூலம் எளிதில் மாற்றப்பட முடியாத ஒரு திறனை மாணவர்கள் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

கருத்தரங்கத்தில், மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் மற்றும் இணை செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கி வாழ்த்தி பேசினர்.

வேலைவாய்ப்பு துறை டீன் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை டீன் வள்ளி, கல்வித்துறை டீன் தேன்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லுாரி மாணவர் உருவாக்கிய 'பேப்பர் எக்ஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படை யிலான கல்வி கற்றல் தளம் குறித்த குறும் படம், சர்வதேச அளவிலான 'கோட் விட்டா' நிரலாக்கப் போட்டியில் முதல் 25 இடங்களில் இடம்பிடித்த மாணவர் மகேஷின் 'செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங்' குறும்படம் திரையிடப்பட்டது.

பிளேஸ்மெண்ட் டீன் ஜெய்குமார் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆய்வு கட்டுரைகள், தொழில் நுட்ப திறன், தொழில் நுட்ப வினாடி-வினா போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சிவகுமார், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us