தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்


ADDED : செப் 25, 2025 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.

முகாமிற்கு, பள்ளியின் தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாநில அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி ஆகியோர் முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். டாக்டர் ரத்தினவேல் காமராஜன் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் துணை முதல்வர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் பங்கேற்கும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி,பொறுப்பாளர் ஜஸ்டின் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us