தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய சிலம்பம் போட்டி புதுச்சேரிக்கு இரண்டாம் இடம் புதுச்சேரிக்கு இரண்டாம் இடம்

 தேசிய சிலம்பம் போட்டி புதுச்சேரிக்கு இரண்டாம் இடம் புதுச்சேரிக்கு இரண்டாம் இடம்

 தேசிய சிலம்பம் போட்டி புதுச்சேரிக்கு இரண்டாம் இடம் புதுச்சேரிக்கு இரண்டாம் இடம்


ADDED : பிப் 04, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான 13வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி முதலிடம் பிடித்தது.

பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில், தேசிய அளவிலான 13வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

புதுச்சேரி, உப்பளம் ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில், கடந்த 30ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்த இப்போட்டியை இந்திய சிலம்பாட்ட சம்மேளன தலைவர் பிரதீப் ராஜே துவக்கி வைத்தார்.

இப்பேட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியில், தமிழக அணி முதலிடத்தை பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது. புதுச்சேரி அணி இரண்டாமிடமும், மேற்கு வங்க அணி மூன்றாமிடத்தையும் பிடித்தது.

தொடர்ந்த நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்திய சிலம்பாட்ட சம்மேளன பொதுச்செயலாளர் அழகிரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான முதல்வர் ரங்கசாமி வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக பொதுச்செயலாளர் அபுல் கலாம், பொருளாளர் ஆனந்தன், உறுப்பினர்கள் ரகு, குமரேசன், பாலகிருஷ்ணன், தினா, இம்தியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us