தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு ஊழியர்களுக்கான தேசிய வாலிபால் போட்டி

அரசு ஊழியர்களுக்கான தேசிய வாலிபால் போட்டி

அரசு ஊழியர்களுக்கான தேசிய வாலிபால் போட்டி


ADDED : பிப் 20, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி ஆண்கள் அணி 4வது இடம்

புதுச்சேரி: அரசு ஊழியர்களுக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டியில், புதுச்சேரி ஆண்கள் அணி 4வது இடம் பிடித்தது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய அளவில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

அரசு ஊழியர்களுக்கான வாலிபால் போட்டி சென்னை ராதாக்கிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் நடந்தது.

இதில், புதுச்சேரி அரசு ஊழியர்களை கொண்ட ஆண்கள் அணியினர் 12 பேரும், பெண்கள் அணியினர் 12 பேர் கொண்ட 2 அணிகள் பங்கேற்றது.

இதில், அரசு ஊழியர்கள் ஆண்கள் அகில இந்திய அளவிலான போட்டியில், 4வது இடம் பிடித்தது.

தற்போது அரசு ஊழியர்களுக்கான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி வரும் மார்ச் 5ம் தேதி முதல் 8 ம் தேதி வரை சண்டிகரில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க உள்ள புதுச்சேரி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் தலா 18 பேரும், 2 கோச், 2 மேலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு நேற்று உப்பளம் ராஜிவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us