ADDED : ஜன 27, 2025 04:41 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில், ஏராளமான கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் ஜன., 25 ம் தேதி தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா, கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தலைமை தாங்கினார்.
கலெக்டர் குலோத்துங்கன், முன்னிலை வகித்தார்.தேர்தல் துணை தலைமை அதிகாரி தில்லைவேல் வரவேற்றார். விழாவில் முதல் கட்டமாக, வாக்காளர் உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்துபுதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக ஓட்டளிக்க உள்ள கல்லுாரி மாணவ-மாணவியருக்கு, தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் அடையாள அட்டை வழங்கினார்.அவர்பேசுகையில், 'புதுச்சேரியில் பல்வேறு அம்சங்களுடன் லோக்சபா தேர்தல் நடந்தது.வருங்கால வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் தேர்தல் செயல்பாட்டில் திறம்பட பங்கேற்க ஊக்குவிப்பதும்,100 சதவீத ஓட்டுப்பதிவிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த கொண்டாட்டங்களின் அடிப்படை நோக்கம்.முதல் முறை வாக்காளர்கள்சிந்தித்துஓட்டளிக்க வேண்டும்' என்றார்.இதைத்தொடர்ந்துபல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தலைமை அதிகாரி ஆதர்ஷ் நன்றி கூறினார்.

