தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய இளையோர் தின விழா

தேசிய இளையோர் தின விழா

தேசிய இளையோர் தின விழா


ADDED : ஜன 14, 2025 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருபுவனை ராமகிருஷ்ண சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளை சார்பில், சுவாமி விவேகானந்தர் 163வது பிறந்தநாள் விழா மற்றும் தேசிய இளையோர் தின விழா கொண்டாப்பட்டது.

விழாவில், புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் தலைமை சுவாமி நித்யேஷானந்தா மகராஜ் தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். ஐரோப்பா நாட்டை சேர்ந்த மயக்கவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சலோ மோனாவா, மனநல மருத்துவர் டாத்மார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில், விதவை பெண்களுக்கு புடவை, ஊனமுற்ற ஆண்களுக்கு வேட்டி சட்டை வழங்கப்பட்டது.

அறக்கட்டளை செயலர் சீனுவாசன் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அறக்கட்டளை உறுப்பினர் நிவேதிகா சிறப்பு விருந்தினர்களை கவுரவப்படுத்தினார்.

விழாவில் விவேகானந்தரின் சிந்தனைகள் குறித்து போற்றப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விவேகானந்தர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us