/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய இளைஞர் தின உறுதிமொழி ஏற்பு
/
தேசிய இளைஞர் தின உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 16, 2026 07:06 AM

புதுச்சேரி: தேசிய இளைஞர் தினத்தையொட்டி, யோகாவுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சாகச மேம்பாட்டு குழு புதுச்சேரி கிளை சார்பில், சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்தநாள் விழா, தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, ரெட்டியார்பாளையம் மூலக்குளத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மாநிலத் தலைவர் சரவணன், துணைத் தலைவர்கள் செந்தில்குமார், மனோகர், சேர்மன் எழிலன் லெபல், பொருளாளர் ஆனந்தராஜன், அமைப்புச் செயலாளர் சதீஷ்குமார், மாநில உறுப்பினர் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் வேலாயுதம், பல்வேறு கிளைகளைச் சேர்ந்த இளைஞர் விடுதி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அனைவரும் தியானம் செய்தனர். தொடர்ந்து இந்திய தேசத்தின் மீதும் தாய் மொழியின் மீதும் உண்மையாகவும் பற்று உடையவனாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.
உறுப்பினர் தேவசேனாபதி கூறுகையில், 'இளைஞர்கள் தான் நாட்டின் வளம். இளைஞர்கள் தங்கள் உள்ளார்ந்த ஆற்றலை விழித்தெழச் செய்யவும், ஒழுக்கமான வாழ்க்கையைக் கடைப்பிடிக்கவும், சமூகத்திற்குப் பொறுப்புணர்வுடன் பங்களிக்க துாண்டுவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த உறுதிமொழி ஏற்பு நடத்தப்பட்டது.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு புதிய குறிக்கோளை உணர்த்தும் வகையில், தியானமும் மேற்கொள்ளப்பட்டது' என்றார்.

