ADDED : அக் 28, 2024 04:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் இயற்கைபாரம்பரிய உணவு திருவிழா நேற்று நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். தலைமை விருந்தினராக தகவல் தொழில்நுட்ப துறை மூத்த ஆலோசகர் சித்ரா பாரத் குமார் கலந்துகொண்டு விழாவை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, இயற்கை பாரம்பரிய உணவுகளின் அவசியம் குறித்து விளக்கினார்.
புதுச்சேரி கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் மழலை மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
தன்னம்பிக்கை கலைக்குழுவின் நிறுவனர் எலிசபெத் கலந்துகொண்டு காய்கறிகள் மற்றும் கீரைகளின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு போட்டிகள் நடத்தினார்.விழாவில், இயற்கை பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து மழலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் விமலா, அன்பரசி பள்ளியின் பொறுப்பாளர்கள் ஜஸ்டின் மற்றும் ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.
