/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழா பூர்த்தி
/
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழா பூர்த்தி
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழா பூர்த்தி
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழா பூர்த்தி
ADDED : ஜூலை 04, 2025 02:21 AM
புதுச்சேரி: பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள வராகி அம்பாளுக்கு ஆஷாட நவராத்திரி விழா பூர்த்தி உற்சவம் இன்று நடக்கிறது.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அம்பாளின் படை தளபதியாக விளங்கிய சப்த மாதாக்களின் ஒருவரான வராகி அம்பாள் அருள்பாலித்து வருகிறார்.
திருமாலின் அவதாரமான வராகி அம்பாளுக்கு, கடந்த 26ம் தேதி முதல் 4ம் தேதி ஆஷாட நவராத்திரி பூஜை நடந்து வருகிறது. அதையொட்டி, தினமும் வராகி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீராபாதனை நடக்கிறது.
தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் வராகி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், இசை மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான வராகி அம்பாளுக்கு ஆஷாட நவராத்திரி பூர்த்தி உற்சவம் இன்று 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, காலை 8:30 மணிக்கு நவகலச ஸ்தாபனம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி, வராகி அம்பாளுக்கு கலசாபிஷேகம், திபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு மூலவர் வராகி அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் உள் புறப்பாடு நடக்கிறது.