தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நவரை நெல் சாகுபடி முன் பருவ பயிற்சி முகாம்

நவரை நெல் சாகுபடி முன் பருவ பயிற்சி முகாம்

நவரை நெல் சாகுபடி முன் பருவ பயிற்சி முகாம்


ADDED : மார் 12, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் உழவர் உதவியகம் சார்பில், நவரை நெல் சாகுபடி முன் பருவ பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் அலுவலர் திருநாடன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் ராஜேந்திர பிரசாத் பருவத்திற்கு ஏற்ற ரகம் தேர்வு, விதை நேர்த்தி, நடவு வயல் பராமரிப்பு, உர மேலாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கினார்.

பூச்சியியல் வல்லுனர் ரேவதி நடவு வயலிலில் பூச்சி தாக்குதல் ஏற்படுத்தும் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிதல், நன்மை செய்யும் பூச்சி, தீமை செய்யும் பூச்சிகள் இனம் கண்டறிதல் குறித்து விளக்கினார்.

முகாமில் கரியமாணிக்கம், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார், மடுகரை, மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை வெங்கடாசலம், ரங்கநாதன், லட்சுமிநாராயணன், இருதயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us