தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நவோதயாவில் 9வது, பிளஸ் 1 வகுப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நவோதயாவில் 9வது, பிளஸ் 1 வகுப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நவோதயாவில் 9வது, பிளஸ் 1 வகுப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


ADDED : செப் 24, 2025 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : நவோதயாவில் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல் சேருவதற்கு, விண்ணப்பிக்க வரும் 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர், கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி, காலாப்பட்டில், மத்திய அமைச்சகத்தின் கீழ், ஜவகர் நவோதயா வித்யாலயா இயங்கி வருகிறது.

9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் (அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில்) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக, நடத்தப்படும் தெரிவுநிலை, தேர்வின் அடிப்படையில், சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான, கடைசி தேதி நேற்று 23ம் தேதி என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, வரும் 7ம் தேதி வரை, விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களின் பெற்றோர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us