/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி உற்சவம்
/
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி உற்சவம்
ADDED : செப் 30, 2024 05:25 AM
புதுச்சேரி: இரும்பை பாலாதிரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் கும்பாபிேஷகத்திற்கு பிறகு நவராத்திரி உற்சவம் நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அடுத்த இரும்பை டோல்கேட் அருகே பாலாதிரிபுரசுந்தரி அம்பாள் கோவில் எழுந்தருளி உள்ளது. பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், ராஜமாதங்கி சன்னதி, வாராஹி சன்னதி திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு நவராத்திரி உற்சவம் மற்றும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும். அதுவரை தின சரி பூஜைகள் அம்பாளுக்கு நடந்து கொண்டிருக்கின்றது.