ADDED : அக் 08, 2024 02:59 AM

புதுச்சேரி: புதுச்சேரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 4ம் ஆண்டு நவராத்திரி விழா, துர்கா பூஜை கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
புதுச்சேரி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவில் அருகே நடந்து வரும் விழாவில், நேற்று மாலை 6:00 மணிக்கு திரிபுர வைரவி மூல மந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 7:50 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி பொறுப்பாளர் இளங்கோ தலைமை தாங்கினார். வடதமிழ்நாடு இணை செயலாளர் ராஜா சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் கோதண்டராமன் நன்றி கூறினார்.
இதில், புதுச்சேரி மாநில தலைவர் ரவிக்குமார், மாநில துணைத்தலைவர் கோடீஸ்வரன், செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் மற்றும் ப்ரீதா பிரவுதாஸ் மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.
