/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடற்படை அதிகாரிகள் ஆலோசனை
/
ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடற்படை அதிகாரிகள் ஆலோசனை
ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடற்படை அதிகாரிகள் ஆலோசனை
ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடற்படை அதிகாரிகள் ஆலோசனை
ADDED : நவ 27, 2025 05:08 AM

வானுார்: இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சமூக மற்றும் இளைஞர் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
சர்வதேச நகரமான ஆரோவில் ப குதிக்கு நேற்று இந்திய கடலோர படை டி.ஐ.ஜி., தசிலா, துணை கமாண்டர் சுனதி சர்மா ஆகியோர் வருகை புரிந்தனர். அங்கு, அறக்கட்டளை சிறப்பு அலுவலர் சீத்தராமன், மூத்த ஆலோசகர் வேணுகோபால், ஆலோசகர் கோஷி வர்கீஸ் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினர்.
அப்போது, மீனவர்கள் 'கடலில் எங்கள் கண்கள் மற்றும் காதுகள்' என்பதை வலியுறுத்தி, கடலோர காவல் படையின் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விளக்கினர். மேலும், இளைஞர்களை இந்திய கடற்படைக்கு ஊக்குவித்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ச்சியாக அவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகில் உள்ள கடற்கரை மற்றும் ஆரோ பீச் பகுதிகளில் கடற்கரையை சுத்தம் செய்வது குறித்து பல்வேறு இயக்கங்களுடன் ஆலோசனை நடத்தினர்.