/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊழியர்களுக்கு சம்பளம் எங்கே நாஜிம் கேள்வி
/
ஊழியர்களுக்கு சம்பளம் எங்கே நாஜிம் கேள்வி
ADDED : மார் 19, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது நாஜிம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
மாநிலம் முழுவதும் பணியாற்றக்கூடிய அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த மூன்று மாதமாக சம்பளம் இல்லாமல் உள்ளனர். அங்கன்வாடி ஊழியர்களிடம் பல வேலைகளை ஒப்படைக்கின்றோம். அரசு தான் அவர்களை பணி நிரந்தரம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சம்பளத்திற்காக பணம் ஒதுக்கப்படுகின்றது. அப்புறம் ஏன் சம்பளம் போடவில்லை. எங்கே கோளாறு இருக்கின்றது.
அரசு உதவி பெறும் பள்ளியிலும் இதே நிலைமை தான். எனவே காலத்தோடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.