/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரிடம் நாஜிம் எம்.எல்.ஏ., மனு புதுச்சேரி இளைஞர்கள் பங்கேற்க நாஜிம் எம்.எல்.ஏ., மனு

ADDED : ஆக 28, 2025 02:00 AM

புதுச்சேரி: தென்மண்டல அளவில் நடக்கும் இறகுப்பந்து போட்டியில் புதுச்சேரி இளைஞர்கள் பங்கேற்க ஆவண செய்ய வேண்டும் என, முதல்வர் ரங்கசாமியிடம் நாஜிம் எம்.எல்.ஏ., மனு அளித்தார்.
மனுவில், புதுச்சேரி மாநில பேட்மின்டன் சங்கம் கடந்த 2012ம் முதல் இரு குழுக்களாகப் பிரிந்து செயல்படுவதால், எவ்வித போட்டிகளும் நடத்தப்படவில்லை. இதில் இளம் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கணிசமாக விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்கள் தேசிய அளவில் தங்களது திறனை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சங்கத்தின் பிரச்னைகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.
2025-26 கல்வியாண்டுக்கான இந்திய இறகுப்பந்து சங்கம் சார்பில் வரும் 2ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தெற்கு மண்டல இறகுப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை நீதிமன்றத்தின் ஆணைப்படி, சங்கத் தேர்தலை நடத்துவதற்கு முன், தென்மண்டல போட்டியில் புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்கஆவண செய்ய வேண்டும்.
புதுச்சேரி இறகுப்பந்து சங்கத்தில் உள்ள சட்டரீதியான சிக்கல்களை தீர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். சங்கத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும், வீரர்கள் தேர்வு மற்றும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகளை உடனே நடத்தவும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.