/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
9 அரசு பள்ளிகளில் என்.சி.சி., அங்கீகாரம் ரத்து
/
9 அரசு பள்ளிகளில் என்.சி.சி., அங்கீகாரம் ரத்து
ADDED : நவ 16, 2024 02:19 AM
நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
புதுச்சேரி: பயிற்சியாளர்கள் இல்லாததால் 9 அரசு பள்ளிகளில் என்.சி.சி., பாட பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு நேரு எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை;
புதுச்சேரி அரசு பள்ளிகளில் இயங்கி வந்த என்.சி.சி., சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சியாளர்கள் இல்லாததால் என்.சி.சி., பாட பிரிவு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாவலர் நெடுஞ்செழியன், கல்வே காலேஜ், இளங்கோ அடிகள், ஜீவானந்தம், விவேகானந்தா, உழவர்கரை அரசு பள்ளி, தந்தை பெரியார் பள்ளி, கல்மண்டபம் பள்ளி, தொண்டமாநத்தம், திரு.வி.க., கணுவாய்பேட்டை பள்ளிகள் என்.சி.சி. ஜூனியர் பிரிவு இயங்கி வந்தது.
தற்போது நாவலர் நெடுஞ்செழியன், தொண்டமாநத்தம் பள்ளியில் மட்டுமே இயங்கி வருகிறது. மீதமுள்ள 9 பள்ளிகளில் என்.சி.சி., ஜூனியர் பிரிவு ரத்தாகி உள்ளது.
அரசு பள்ளிகளில் ரத்தான என்.சி.சி., ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகள் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை தொழிற்நுட்ப பள்ளியில் மட்டுமே என்.சி.சி., சீனியர் பிரிவு உள்ளது. அங்கும் பயிற்சி அளிக்க நிரந்தர ஆசிரியர் இல்லாததால், அப்பள்ளியும் என்.சி.சி., பாட பிரிவு தகுதி இழக்கும் நிலை உள்ளது. எனவே, அரசு பள்ளிகளில் என்.சி.சி., பாட பிரிவு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.