/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.சி.சி., உதயநாள் ரத்ததான முகாம்
/
என்.சி.சி., உதயநாள் ரத்ததான முகாம்
ADDED : நவ 25, 2024 05:25 AM

திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரியில் என்.சி.சி., உதய நாளையொட்டி தரைப்படை பிரிவு சார்பில் மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாம் நடந்தது.
முகாமின் துவக்க விழாவிற்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை தலைவரும், என்.சி.சி., அலுவலருமான லெப்டினன்ட் கதிர்வேல் முன்னிலை வகித்தார். புதுச்சேரி என்.சி.சி., தலைமையக அவில்தார் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யா முகாமை தொடங்கி வைத்தார். புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்தவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன ரத்த வங்கி டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் என்.சி.சி., மாணவ-மாணவிகளுக்கு உடல் பரிசோதனை செய்து கொடையாளர்களிடம் இருந்து ரத்ததானம் பெற்றனர். இதில் 50 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். என்.சி.சி., தரைப்படை பிரிவு முதுநிலை மாணவர் ஜெகன் நன்றி கூறினார்.