தட்டாஞ்சாவடி தொகுதியில் நே.ம.க., வேட்பாளர் தீவிர பிரசாரம்
தட்டாஞ்சாவடி தொகுதியில் நே.ம.க., வேட்பாளர் தீவிர பிரசாரம்
ADDED : ஏப் 07, 2026 05:30 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி:தட்டாஞ்சாவடி தொகுதி நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து, அக்கட்சி தலைவர் நேரு பிரசாரம் மேற்கொண்டார்.
த.வெ.க., கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் நே.ம.க.,வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நே.ம.க., தலைவர் நேரு குதிரை மற்றும் 2 ஆயிரம் பைக்குகளில் பேரணியாக சென்று சூறாவளி பிரசாரம் செய்து குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக இருளில் மூழ்கி இருக்கும் தட்டாஞ்சாவடி தொகுதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர அனைவரும் குக்கர் சின்னத்தில் ஓட்டு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.
