/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீட் தேர்வு பயிற்சி வகுப்பு : கலெக்டர் துவக்கி வைத்தார்
/
நீட் தேர்வு பயிற்சி வகுப்பு : கலெக்டர் துவக்கி வைத்தார்
நீட் தேர்வு பயிற்சி வகுப்பு : கலெக்டர் துவக்கி வைத்தார்
நீட் தேர்வு பயிற்சி வகுப்பு : கலெக்டர் துவக்கி வைத்தார்
ADDED : ஏப் 09, 2025 03:51 AM

காரைக்கால்,: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் துவக்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி கல்வித்துறை இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கேம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் ஸ்பீக்கர்ஸ் நீட் கோச்சிங் சென்டர் மூலம் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, பள்ளி துணை முதல்வர் ஞானபிரகாசி முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் பேசுகையில்., அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் துரித பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இது போன்ற கல்வி சார்ந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் . வரும் ஒரு மாதம் பொற்காலம் என்பதால் கடுமையாக உழைத்து நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட கடினமான பாடங்களை மாதிரி வினாத்தாள்களை கொண்டு படித்து எழுதி தேர்வுக்கு 100 சதவீதம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 10 பேராவது டாக்டருக்கு தேர்ச்சி பெற வேண்டும் என்றார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

