இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி ஒத்துழைப்பு நேரு எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி ஒத்துழைப்பு நேரு எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : செப் 10, 2026 05:12 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு, எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக நேரு எம்.எல்.ஏ., குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு, விநாயகம் இரண்டாம் இடத்தை பிடித்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விநாயகம் அனைத்து பணிகளையும் துவக்கிவிட்டார். தொகுதியை கைப்பற்றகூடிய தகுதி அவரிடம் உள்ளது.
விநாயகம் போட்டியிட்டால், ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால், அவர் தேர்தலில் நிற்ககூடாது என சிலர் நினைக்கின்றனர். இதற்கு ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். பெரிய கட்சியான தி.மு.க., தேர்தலில் போட்டியிட ஆள் இல்லாத சூழ்நிலையில், இந்திய கம்யூ., கட்சியில் இருந்து வெளியேறிய சேதுசெல்வத்தை வேட்பாளராக நிறுத்தி ஓட்டை பிரிக்கும் எண்ணத்தில் உள்ளனர்.
கம்யூ., கட்சியினர், தற்போது தேர்தலில் நிற்பதாக ஆதரவு கேட்கின்றனர். இதை திட்டமிட்ட சதியாக பார்க்கிறேன். இது குறித்து, த.வெ.க., தலைவர் விஜய், அமைச்சர் புஸ்சிஆனந்த் நல்ல முடிவு எடுப்பார்கள். அதே நேரத்தில் காங்., சார்பில் போட்டியிட கேட்டுக் கொண்டார்கள். அது குறித்து பிறகு முடிவு செய்யலாம் என கூறிவிட்டேன். த.வெ.க., எடுக்கும் முடிவை பொறுத்துதான் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தலைமையின் கருத்துப்படி செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
