/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து கோரி 27ல் டில்லியில் போராட்டம் நேரு எம்.எல்.ஏ., அறிவிப்பு
/
மாநில அந்தஸ்து கோரி 27ல் டில்லியில் போராட்டம் நேரு எம்.எல்.ஏ., அறிவிப்பு
மாநில அந்தஸ்து கோரி 27ல் டில்லியில் போராட்டம் நேரு எம்.எல்.ஏ., அறிவிப்பு
மாநில அந்தஸ்து கோரி 27ல் டில்லியில் போராட்டம் நேரு எம்.எல்.ஏ., அறிவிப்பு
ADDED : ஜூன் 25, 2025 01:08 AM
புதுச்சேரி : மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வரும் 27 ம் தேதி டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என, நேரு எம்.எல்.ஏ., அறிவித்தார்.
அவர், கூறியதாவது:
மாநில அந்தஸ்து புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மத்தியில் ஆளும் எந்த அரசாக இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர முன்வர வில்லை. இதனால், புதுச்சேரியில் 3 அதிகார மையங்கள் உருவாகியுள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. அதிகார மையங்களுக்கு இடையிலான மோதல் காரணமாக புதுச்சேரியின்வளர்ச்சி தடைப்பட்டுள்ளது.
இதற்கு, மாநில அந்தஸ்து பெறுவது மட்டுமே தீர்வாகும். மக்கள் எழுச்சியோடு போராட்டத்தை நடத்துவதன் மூலம் தான் அதை பெற முடியும். அதற்கான முயற்சிகளில் பொது நல அமைப்புகளோடு இணைந்து ஈடுபட்டுள்ளோம்.
மாநில முழுதும் ஒரு லட்சம் கையெழுத்துபெற திட்டமிட்டு பணியாற்றினோம். காரைக்கால் மக்கள்கூட இந்த இயக்கத்தில் பங்கேற்று மிகுந்த ஆர்வத்தோடு கையெழுத்திட்டுள்ளனர். மாநில அந்தஸ்துக்காக தனியாக ஒரு இணையதளத்தையும் உருவாக்கியுள்ளோம்.
வரும் 27ம் தேதி காலை 10:00 மணிக்கு, டில்லி ஐந்தர் மந்தர் அருகே போராட்டம் நடத்த உள்ளோம்.இதற்காக, இன்று (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பொதுநல அமைப்பு நிர்வாகிகள், மக்கள் புறப்படுகின்றனர்.இந்த போராட்டத்தை நாங்கள் துவங்கியுள்ளோம். தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு நாம் கொடுக்கும் அழுத்தம் மூலமாகத்தான் மாநில அந்தஸ்தை பெற முடியும். பொதுநல அமைப்புகளின் சொந்த பணத்தில் தான் போராட்டத்தை நடத்துகிறோம்' என்றார்.