sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சபாநாயகருக்கு நேரு எம்.எல்.ஏ., கண்டனம்

சபாநாயகருக்கு நேரு எம்.எல்.ஏ., கண்டனம்

சபாநாயகருக்கு நேரு எம்.எல்.ஏ., கண்டனம்


ADDED : ஜன 30, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 06:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாணவர்கள் குறித்து பேச்சுக்கு சபாநாயகர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

சபாநாயகர் செல்வம் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களை அவமானபடுத்தும் விதமாக பேசியுள்ளார். கல்வி சேவையில் நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் பள்ளிகளை அவமரியாதை செய்யும் வகையிலும் பேசியது கண்டிக்கத்தக்கது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சிறுபான்மையினர் பள்ளிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் பலர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். அவர்களையும் சபாநாயகர் சைக்கோ என சொல்வாரா, குடியரசு தின விழாவில் தனியார் பள்ளிகளுக்கு விருது மற்றும் கேடயம் வழங்கும் அரசையும் சபாநாயகரின் பேச்சு கொச்சைப்படுத்தியுள்ளது.

தனது செயல்பாடுகளில் சுப்ரீம் கோர்ட் கூட தலையிட முடியாது என கூறும் அளவுக்கு சபாநாயகர் பேச்சு ஆணவமாக உள்ளது. சபாநாயகர் மருத்துவரிடம் தனது மனநலத்தை பரிசோதிக்க வேண்டும். அவர் பேச்சுக்கு உடனே வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்களை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us