தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு 

காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு 

காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு 


ADDED : செப் 24, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் விநாயகத்தை ஆதரித்து உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு நேற்று தொகுதிக்கு உட்பட்ட கெங்கையம்மன் கோவில் வீதியின் 3 தெருங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். 

அப்போது, நேரு எம்.எல்.ஏ., கூறுகையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் கடந்த காலங்களில் ஊழல் குற்றவாளி என கோர்ட் மூலம்  தீர்ப்பு வெளியாகி, எம்.எல்.ஏ., பதவிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக தொகுதி பக்கமே எட்டி பார்க்காமல், தன் சொந்த தொழில்களை கவனித்து வந்தார். இவரால் ஒரு இடைத்தேர்தல், இவரது கட்சித் தலைவரால் ஒரு இடைத்தேர்தல் மக்களே சிந்தியுங்கள்.

தற்போது ஐகோர்ட்டில் வெளியாகி உள்ள தீர்ப்பில் இவர் குற்றம் செய்யாதவர் என வரவில்லை. இவர் மீதான குற்றத்தை சி.பி.ஐ., ம் சரியான முறையில் நிரூபிக்கவில்லை என தான் வந்துள்ளது. இதனால், சி.பி.ஐ.,யின் மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இவர் ஊழல் செய்தவர் என எப்பொழுது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம்.

 தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பாதாள கழிவுநீர் தொட்டி அடைப்பு, குடிநீர் பிரச்னை மற்றும் மின்தடை ஆகியவற்றை சரி செய்து, கூப்பிட்ட குரலுக்கு உடனடியாக ஓடோடி வரும் காங்., வேட்பாளர் விநாயகத்திற்கு ‘கை’ சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.இதில், மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us