/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து பிரச்னையில் தமிழக எம்.பி.,க்கள் ஆதரவு தேவை; நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
மாநில அந்தஸ்து பிரச்னையில் தமிழக எம்.பி.,க்கள் ஆதரவு தேவை; நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
மாநில அந்தஸ்து பிரச்னையில் தமிழக எம்.பி.,க்கள் ஆதரவு தேவை; நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
மாநில அந்தஸ்து பிரச்னையில் தமிழக எம்.பி.,க்கள் ஆதரவு தேவை; நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2025 01:19 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சரியான தருணம் வந்துள்ளதால் இவற்றை அரசு பயன்படுத்தி இதற்கான நடவ டிக்கை முன்னெடுக்கவேண்டும் என, சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு தலைமையிலான பொதுநல அமைப்புகள் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள், முதல்வரிடம் கொடுத்த மனுவில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என, பொதுநல அமைப்புகள் சார்பில், கடந்த மாதம் 27ம் தேதி டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளோம்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கையெழுத்திட்ட ஒப்புகை கடிதம் நேரு எம்.எல்.ஏ.,விற்கு வந்துள்ளது. இந்த போராட்டத்தினால் மத்திய அர சுக்கு அழுத்தம் ஏற்பட்டிருக் கிறது.
இதற்காக சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுநல அமைப்புகளை டில்லிக்கு அழைத்துச்சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து தீர்மானத்தை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அண்டை மாநிலமான தமிழகத்தில் 39 எம்.பி.,க் கள், ராஜ்யசபாவில் 10க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் உள்ளனர்.
அவர்களின் ஆதரவை பெற்று புதுச்சேரி காங்., எம்.பி., வைத்திலிங்கம், மாநில அந்தஸ்து குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து வேண்டும் என, அம்மாநில முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். இது நமக்கு சரியான தருணம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்திற்கான அரசியல் அதிகாரம் பெறுவதற்கு முதல்வர் மற்றும் புதுச்சேரி எம்.பி.,கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் முன்னெடுத்து மாநில அந்தஸ்தை பெற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.