தற்காலிக சபாநாயகரை நிரந்தரமாக்க வேண்டும் நேரு எம்.எல்.ஏ., கருத்து
தற்காலிக சபாநாயகரை நிரந்தரமாக்க வேண்டும் நேரு எம்.எல்.ஏ., கருத்து
ADDED : ஆக 24, 2026 05:01 PM
புதுச்சேரி: தற்காலிக சபாநாயகரையே, நிரந்தர சபாநாயகராக நியமிக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
தற்காலிக சபாநாயகர் மூலம் கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் நடப்பது இந்தியாவில் முதல்முறையாகும். தற்காலிக சபாநாயகருக்கு மாற்றாக துணை சபாநாயகர் இல்லை. சட்டசபையை நடத்த நிரந்தர சபாநாயகர் தேவை. கடந்த இரண்டு ஆட்சி காலத்தில் புதியதாக தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். இதில் 2016ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட சபாநாயகர் கடைசி நேரத்தில், சபையை சின்னாபின்னமாக்கிவிட்டார். கடந்த ஆட்சியில் இருந்த சபாநாயகர் சரியாக செயல்படவில்லை. தேர்தல் நடந்து நுாறு நாட்கள் கடந்த நிலையில், நிரந்தர சபாநாயகர் தேர்தெடுக்கப்படவில்லை.
எனவே காலம் தாழ்த்தாமல், தற்போதுள்ள தற்காலிக சபாநாயகரையே, நிரந்தரமாக தேர்தெடுக்க வேண்டும். அமைச்சர்கள் தவணை முறையில் நியமிக்கப்பட்டனர். இலாகாக்களும் தாமதமாக வழங்கப்பட்டது. தற்போது பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி கருத்து வேறுபாடு தற்போது வெளிப்படையாக தெரிகிறது. கவர்னர் முதல்வர் இடையே கருத்து வேறுபாடு இருந்தால், தனியாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
