தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அமைச்சரிடம் வாக்குவாதம் நேரு எம்.எல்.ஏ., மீது வழக்கு

அமைச்சரிடம் வாக்குவாதம் நேரு எம்.எல்.ஏ., மீது வழக்கு

அமைச்சரிடம் வாக்குவாதம் நேரு எம்.எல்.ஏ., மீது வழக்கு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபையில் போராட்டம் நடத்தி, அமைச்சரிடம் கடும் வாக்குவாதம் செய்த நேரு எம்.எல்.ஏ., மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண் வியாபாரி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று முன்தினம் புதுச்சேரி சட்டசபையில், முற்றுகை போராட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து, நேரு எம்.எல்.ஏ., அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து சட்டசபை மார்ஷல் பழனிசாமி பெரியகடை போலீசில் புகார் அளித்தார். புகாரில் பொதுவான நோக்கத்துடன் சட்டவிரோதமாக ஒன்று கூடி, பொதுப்பணி அமைச்சரை தகாத வார்த்தைகளில் திட்டி, மிரட்டல் விடுத்ததாகவும், சட்டசபையின் முதன்மை கதவின் கண்ணாடியை சேதப்படுத்தியதாகவும், சபை காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளதாகவும், அத்துடன் கலைந்து செல்லுமாறு கூறியும், அங்கேயே தொடர்போராட்டம் நடத்தியாக கூறியிருந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நேரு எம்.எல்.ஏ., மீது, அத்துமீறி நுழைதல், சட்ட விரோதமாக கூடுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் , அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல், தாக்குதல், சட்டவிரோதமாக கூடி கலைய மறுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேரு எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் நேரு எம்.எல்.ஏ., மீது பதிவு செய்த வழக்குகளில், சில பிரிவுகள் ஜாமினில் வெளிவரமுடியாதவை என்பது குறிப்பிடதக்கது.

அமைச்சர்கள் ஆலோசனை:

நேரு எம்.எல்.ஏ., மீது புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அலுவலகத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன் ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us