/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு வாய்க்காலில் நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
/
உப்பனாறு வாய்க்காலில் நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : பிப் 28, 2024 10:58 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட, உப்பனாறு வாய்க்காலில், நேரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
மழைக்காலங்களில் உப்பனாறு வாய்க்காலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீரானது,வாய்க்கால் ஓருப்பகுதியில் உள்ள நேரு நகர், அந்தோணியார் கோவில் தெரு பகுதி, குபேர் நகர், கென்னடி நகர், சாந்தி நகர், சாரதி நகர் போன்ற பகுதிகளைசூழ்ந்து கொள்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
அந்த வாய்க்காலை மேம்படுத்துதல், துார்வாருதல், தடுப்புச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து, நேரு எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் திருஞானம், நீர்ப்பாசன கோட்ட பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர் உமாபதி மற்றும் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், மனித நேய மக்கள் சேவை இயக்க இளைஞர்கள் பலர் உடன்இருந்தனர்.

