/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்வு நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
இளைஞர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்வு நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
இளைஞர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்வு நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
இளைஞர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்வு நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2025 04:19 AM
புதுச்சேரி: மின் துறை காலியிடங்களில் 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்க வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அவர் பேசியதாவது:
புதுச்சேரி மின்துறையில் பொறியாளர் மற்றும் கட்டுமான உதவியாளர் உள்ளிட்ட 750 பணியிடங்கள் காலியாக இருந்தது. அதில் தற்போது இளநிலை பொறியாளர், கட்டுமான உதவியாளர்கள் பணியை நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் வயது வரம்பு தளர்வு சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடவேண்டும்.10 ஆண்டாக காலி பணியிடம் நிரப்பாததால் இளைஞர்கள் தேர்வு வயதை கடந்துள்ளனர். எனவே 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்க வேண்டும். மின் நுகர்வோருக்கு ஏற்றார்போல் மின்துறையில் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.