/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மக்களிடம் மாநில அந்தஸ்து குறித்து எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் நேரு எம்.எல்.ஏ., ஆவேசம்
/
புதுச்சேரி மக்களிடம் மாநில அந்தஸ்து குறித்து எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் நேரு எம்.எல்.ஏ., ஆவேசம்
புதுச்சேரி மக்களிடம் மாநில அந்தஸ்து குறித்து எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் நேரு எம்.எல்.ஏ., ஆவேசம்
புதுச்சேரி மக்களிடம் மாநில அந்தஸ்து குறித்து எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் நேரு எம்.எல்.ஏ., ஆவேசம்
ADDED : செப் 19, 2025 03:11 AM
புதுச்சேரி: 'ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கள்ள கூட்டணி வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர்' என நேரு எம்.எல்.ஏ., கூறினார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:
கூட்டத் தொடரில் என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆனால் எதிர்கட்சி தலைவரை பேச அனுமதிக்கின்றனர். ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கள்ள கூட்டணி வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.சட்டசபை எத்தனை நாட்களுக்கு நடத்தப்படும் என்று கூறவில்லை. மசோதா தாக்கல் செய்யப்படும் போது அதில் உள்ள நிறைகுறைகள் பற்றி விவாதிக்க கால அவகாசம் தேவை. இன்னும் 6 மாத காலத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளது.
அதற்குள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை செய்து முடிக்கவும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முனைப்புடன் செயலாற்ற வழிவகை செய்ய எம்.எல்.ஏ.,க்கள் விவாதம் நடத்த வாய்ப்பளிக்க வில்லை.
மாநிலத்தில் முக்கிய பிரச்னைகள் பல உள்ளன. நகர மற்றும் புறநகர் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்து, தரமற்றதாக மாறியுள்ளது.
வீடு கட்டும் திட்டத்தின் மானியம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் மக்களின் பிரச்னைகள் பற்றி பேச வாய்ப்பளிக்கவில்லை.
கடந்த 2022ம்ஆண்டும முதல் சென்டாக் மூலம் அளிக்கப்படும் காமராஜர் கல்வி நிதியுதவி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதுமட்டுமின்றி மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றி பேச சட்டசபை கூட்டத்தொடரை குறைந்தபட்சம் 10 நாட்களாவது தொடர்ந்து நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளையும், பிரச்னைகளையும் தீர்வு கண்டு இருக்க வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து ஆளும் அரசு கேட்கிறது. ஆனால் எம்.எல்.ஏ.,க்களை அது தொடர்பாக பேச விடுவவில்லை. இந்த சட்டசபை இன்றோடு கலைத்து விட்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுகின்ற என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசும், எதிர்கட்சியினரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்.
மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து மாநிலத்துக்கான உரிமைகளை பெறும் வரை தேர்தலை புறக்கணிக்க வேண்டும். புதுச்சேரி மக்களிடம் மாநில அந்தஸ்து குறித்து எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நேரு கூறினார்.