தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நேரு எம்.எல்.ஏ., வெளியேற்றம் புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு

 நேரு எம்.எல்.ஏ., வெளியேற்றம் புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு

 நேரு எம்.எல்.ஏ., வெளியேற்றம் புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு


ADDED : பிப் 13, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில், கோஷமிட்ட சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு வெளியேற்றப்பட்டார்.

புதுச்சேரி 15வது சட்டசபையின், 6வது கூட்டத் தொடரின் மூன்றாவது கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபையை துவக்கி வைத்து, இரங்கல் குறிப்பை வாசித்தார்.

தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, பேரவை முன் ஏடுகளை முன் தாக்கல் செய்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு ' சபாநாயகர் செல்வம் சபையை நடத்தலாமா பிற மாநிலங்களில் இதை அனுமதிப்பார்களா.

துணை சபாநாயகர் தான் சபையை நடத்த வேண்டும். இதை எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்க்கிறது. புதுச்சேரியில் மக்களை பற்றி எதிர்க்கட்கிகளுக்கு கவலை இல்லை. செயல்படாத எதிர்க்கட்சிகள் உள்ளது.

போலி மருந்து சாப்பிட்டு இறந்தவர்களுக்கும் சபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்க வேண்டும். இதை கண்டிக்காத எதிர்க்கட்சிகள் எதற்கு. என தொடர்ந்து ஆவேசமாக பேசிக்கொண்டே' இருந்தார். ஆனால் சபாநாயகர் தொடர்ந்து சபையை நடத்தினார். இதையடுத்து நேரு அமைதியாகி தனது இருக்கையில் அமர்ந்தார்.

சபை நடவடிக்கைகை தொடர்ந்தது. சபையில் கூடுதல் செலவினங்களுக்கு முதல்வர், அமைச்சர்கள் தங்கள் துறைகளின் செலவினங்கள் குறித்த ஏடுகளை தாக்கல் செய்தனர். அப்போது எதிர்க்கட்சிகளான தி.மு.க.,- காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசியதால், கூச்சல், குழப்பம் நிலவியது.

அப்போது, நேரு எம்.எல்.ஏ., நேரு, 'சபாநாயகர் இருக்கை முன் நின்று, அராஜகம், அராஜகம், சபாநாயகர் சபையை நடத்துவது அராஜகம்' என கோஷமிட்டார். இதையடுத்து சபாநாயகர் செல்வம், நேரு எம்.எல்.ஏ.,வை வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் சபைகாவலர்கள், நேரு எம்.எல்.ஏ.,வை சபையிலிருந்து வெளியேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us