/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசை சென்றடையவில்லை நேரு எம்.எல்.ஏ., திடுக் குற்றச்சாட்டு
/
புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசை சென்றடையவில்லை நேரு எம்.எல்.ஏ., திடுக் குற்றச்சாட்டு
புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசை சென்றடையவில்லை நேரு எம்.எல்.ஏ., திடுக் குற்றச்சாட்டு
புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசை சென்றடையவில்லை நேரு எம்.எல்.ஏ., திடுக் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 02, 2025 07:12 AM

புதுச்சேரி :மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசினை சென்றடையவில்லை என நேரு எம்.எல்.ஏ., குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுநல அமைப்பினர் கடந்த 27 ம்தேதி புதுடில்லி, ஜந்தர்மந்திர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தொடர்ந்து ரயில் மூலம் நேற்று புதுச்சேரி வந்தடைந்தனர். மாநில அந்தஸ்துக்காண போராட்ட குழுவினரை அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் சால்வை அணிவித்து பாராட்டினார்.
டில்லி போராட்டம் குறித்து ரயில் நிலையத்தில் நேரு எம்.எல்.ஏ., கூறியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி சட்டசபையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 16வது தீர்மானம் இதுநாள் வரை மத்திய அரசுக்கு சென்றடையவில்லை.
தற்போது ஆளும் அரசு மாநில அந்தஸ்து பெறுவதே எங்கள் குறிக்கோள் என்று ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால் இதுவரை அதற்கான முன்னேடுப்புகள் எதையும் செய்யாமல் இருப்பது ஏன். இது குறித்து மக்களிடம் விளக்கி கூறவேண்டும். மாநில அந்தஸ்திற்காக அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களையும் டில்லி அழைத்து சென்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று பல முறை கூறிய முதல்வர் இதுநாள் வரை அதற்கான முன்னேடுப்புகளை செய்யாமல் அலட்சியமாக இருப்பது வருத்தத்திற்குரியது.
பொதுநல அமைப்பினர் மாநில நலனுக்காக டில்லியில் போராடி கொண்டிருக்கும் வேளையில் இங்கு புதுச்சேரியில் ஆளுங்கட்சியினர் தங்களது சுயநல அரசியலுக்காக அரசியல் நாடகங்களை ஆளுங்கட்சியினர் அரங்கேற்றியுள்ளனர். இவர்களின் இந்த செயலை கண்டு ஓட்டளித்த மக்கள் வெட்கி தலைகுனிவுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இதுவரை இரண்டு ஆதிதிராவிடர் அமைச்சர்களின் பதவிகளை பறித்ததுடன் அந்த சமுதாயத்தின் அரசியலமைப்பு பிரதிநிதித்துவத்தை வேரருக்க செய்திருக்கிறார்கள். இதனால் தற்போது சட்டசபையில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை என்ற அவலநிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது.
இது மிகவும் கண்டிக்கதக்கது. இதை எல்லாம் மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.