நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க கவர்னரிடம் கோரிக்கை
நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க கவர்னரிடம் கோரிக்கை
ADDED : ஆக 28, 2026 10:10 PM
புதுச்சேரி: நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 3 பேரை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறவினர்கள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் புதுச்சேரியை சேர்ந்த மூன்று பேர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில், வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில், அவர்களின் உறவினர்கள் கவர்னர் கைலாஷ்நாதனை நேற்று சந்தித்து பேசினர்.
அதில், மாயமான மூவரையும், பாதுகாப்புடன் மீட்டு, புதுச்சேரிக்கு அழைத்து வர அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தினர்.
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து அவர்களை பாதுகாப்புடன் அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகவும், அதற்காக கடந்த இரண்டு நாட்களாக மத்திய அரசு, நேபாளத்தில் உள்ள இந்திய துாரதரகம் மற்றும் நேபாள துாதரகத்துடன் தொடர்ந்து அதிகாரிகளும் தொடர்பில் இருந்து வருவதாகவும் கவர்னர் அவர்களிடம் தெரிவித்தார்.
அப்போது, அரசு செயலர் மற்றும் டில்லி – புதுச்சேரி இல்லத்தின் ரெசிடென்ட் கமிஷ்னர் பங்கஜ்குமார் ஜா உடனிருந்தார்.
