தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணப் பிரச்னையில் தாக்கியவருக்கு வலை

 பணப் பிரச்னையில் தாக்கியவருக்கு வலை

 பணப் பிரச்னையில் தாக்கியவருக்கு வலை


ADDED : ஏப் 26, 2026 09:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 09:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உருளையன்பேட்டை, ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் மன்குஷ், 74; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து இதே தொழிலை செய்து வருபவர் கோரிமேடு அடுத்த பட்டனுார் பகுதியை சேர்ந்த ராமதாஸ். இவர் இடம் வாங்குவது தொடர்பாக மன்குஷிடம் கொடுத்த பணம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் மன்குஷியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us