/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளியை தாக்கிய வாலிபர்களுக்கு வலை
/
தொழிலாளியை தாக்கிய வாலிபர்களுக்கு வலை
ADDED : பிப் 02, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கூலி தொழிலாளியை தாக்கிய இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார், கோட்டை மேடு, பொறையாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 42; கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வீட்டின் எதிரில் நடந்து கொண்டிருந்தார்.
அங்கு பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 20; கனுவாபேட், புதுநகர் சுந்தர், 22, ஆகியோர் மூங்கில் பட்டையால் சக்திவேல் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அவர் அளித்த புகாரின் பேரில், மூர்த்தி, சுந்தர் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

