/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெயிண்டரை தாக்கிய இருவருக்கு வலை
/
பெயிண்டரை தாக்கிய இருவருக்கு வலை
ADDED : அக் 18, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெயிண்டரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை டி.வி., நகரை சேர்ந்தவர் ஸ்டாலின், 28; பெயிண்டர். இவர், கடந்த மாதம் 22ம் தேதி, அண்ணா சாலை பெட்டி கடை ஒன்றில் பொருள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது, குமரகுருபள்ளத்தை சேர்ந்த முருகன், மனோ ஆகியோர் ஸ்டாலினை முறைத்து பார்த்தனர். அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் ஸ்டாலினை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து முருகன், மனோ ஆகியோரை தேடி வருகின்றனர்.