ADDED : ஆக 28, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: திருபுவனை அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருபுவனை அடுத்த திருவாண்டார்கோவிலில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் நவம்மாள்மருதுார் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், 23, மதுரபாக்கம் அறிவுடைநம்பி ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்குள் முன்விரோதம் உள்ளது.
கடந்த 21ம் தேதி வேலைக்கு சென்ற பிரவீன்குமாரை, அறிவுடைநம்பி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வழிமறித்து, இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு, தப்பிச்சென்றனர்.
படுகாயம் அடைந்த பிரவீன்குமார் அரியூர் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து அறிவுடைநம்பி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேரை தேடி வருகின்றனர்.
