/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு புத்தக சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
/
கூட்டுறவு புத்தக சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
கூட்டுறவு புத்தக சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
கூட்டுறவு புத்தக சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஏப் 05, 2025 04:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவுப் புத்தக சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி, கூட்டுறவுப் புத்தக சங்கம் 1996ம் ஆண்டு துவங்கி செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சங்க புதிய தலைவராக பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவராக பன்னீர்செல்வம், செயலாளராக ரங்கநாதன், இயக்குநர்களாக கோவலன், மாலதி, செந்தில்குமார், குழலி, திவ்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தயா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சங்கத்தின் மூலம் இதுவரையில் 120க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சங்கத்தின் 30வது ஆண்டு விழா, வரும் ஜூன் மாதத்தில் நடக்கிறது.