/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராணுவ வீரர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
ராணுவ வீரர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : நவ 24, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி இந்திய முன்னாள் ராணுவ வீரர்களின் லீக் நலச்சங்கத்தின் 19 ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், லீக் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தலைவராக பெருமாள், மூத்த துணைத் தலைவராக ஜோதிகுமார், துணை தலைவராக பரமசிவம், பொது செயலாளராக குணசேகர், செயலாளராக பாலையா, பொருளாளராக ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரியாக தனுசு உள்ளிட்ட 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை துளசிதாஸ், குப்பன், அரிபுத்திரன், குணசேகரன் மற்றும் அசோகன் ஆகியோர் செய்திருந்தனர்.