/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை
/
புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 30, 2024 05:38 AM
புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வில்லியனுார் ராமநாதபுரம் மாஞ்சாலை தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் சோமசுந்தரம், 2, தனியார் கம்பெனி ஊழியர்.
இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த ரத்திகா,19;, என்பவருடன் திருமணம் நடந்தது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை ரத்திகா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
வீட்டில் இருந்த சோமசுந்தரம் அன்று இரவு 1 மணியளவில் அவரது அறையில் மின்விசிறியில் வேட்டியால் துாக்கிட்டுக்கொண்டார்.
அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.