/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுார் சாலையில் ரூ.15 கோடியில் புதிய பாலம்: சபாநாயகர் தகவல்
/
கடலுார் சாலையில் ரூ.15 கோடியில் புதிய பாலம்: சபாநாயகர் தகவல்
கடலுார் சாலையில் ரூ.15 கோடியில் புதிய பாலம்: சபாநாயகர் தகவல்
கடலுார் சாலையில் ரூ.15 கோடியில் புதிய பாலம்: சபாநாயகர் தகவல்
ADDED : டிச 06, 2024 04:46 AM
அரியாங்குப்பம் : கடலுார் சாலையில், 15 கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்டப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
பெஞ்சல் புயலால் கன மழை பெய்தது. அதன் காரணமாக, கடந்த 1ம் தேதி, வீடூர், சாத்தனுார் அணை திறக்கப்பட்டது. புதுச்சேரி, கடலுார் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கடலுார் சாலை துண்டிக்கப்பட்டது. விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச் சாலையில் கடலுாருக்கு செல்லும் வாகனங்களை திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கடலுார் சாலை இடையார்பாளையம் ஆற்று பாலத்தின் இணைப்பு பகுதி உள் வாங்கியது. முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டு, பாலத்தின் உறுதி தன்மை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, சேதமான பாலத்தின் இணைப்பு பகுதியில், 40 லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும், 15 கோடியில், புதிய பாலம் கட்டப்படும் என அவர் செய்தியார்களிடம் தெரிவித்தார்.